பெயர்: அமரர் சின்னப்பொடி இரத்தினம்
இடம்: கைதடி.
Receipt No: சி/570695
பிரசுரிக்கப்பட்ட திகதி : 2010-09-24
கைதடி கயற்றசிட்டி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தான பரிபாலன சபையின் முன்னாள் உபதலைவர் சின்னப்பொடி இரத்தினம் அவர்கள் எமது ஆலய வளர்ச்சிக்காக அரும்பெரும் தொண்டு ஆற்றிய பெரியார்களில் ஒருவராவார் .
"உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்'
என்னும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கு அமைய தன் செயலை நெறிப்படுத்திய உத்தமரின் பிரிவால் துயருறும் அன்னாரது குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு கந்தவேல் பெருமானின் தொண்டு பெரிதென நினைந்து
தன்னாலான பணிகளைச் செய்த
அமரர் சின்னப்பொடி இரத்தினம்
அவர்களின் ஆன்மா சாந்திபெற்று மேல்நிலையில் வாழவேண்டு மென நினைந்து கந்தவேல் பெருமானின் பாதத்தை வருடி பிரார்த் தனை செய்வோமாக.
பரிபாலனசபை.
கைதடி வடக்கு,
கைதடி.
(உதயன் நாளிதழ் - யாழ்ப்பாணம்)
Keine Kommentare:
Kommentar veröffentlichen